Sudharshini / 2015 டிசெம்பர் 16 , பி.ப. 12:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக்
மடவளை மதீனா தேசிய பாடசாலை மற்றும் ரஜவெல்ல இந்து தேசியப் பாடசாலைகளில் கடமையாற்றி 2008 ஆம் ஆண்டின் பின்னர், ஓய்வுபெற்ற ஆசிரியர்;களுக்கு ஓய்வூதியத் தொகை மீளாய்வு செய்யப்பட்டு நிலுவையுடன் இதுவரை வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. 2015 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டத்தில், 2008ஆம் ஆண்டின் பின் ஓய்வூதியம் பெற்றவர்களது ஓய்வூதியத்தொகை மீளாய்வு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு தகுதியுள்ள சகல ஓய்வூதியக்காரர்;களுக்கும் நிலுவையுடன் அவை வழங்கப்பட்டுள்ளன.
இதற்கமைவாக வத்துகாமம் கல்வி வலயத்திலுள்ள பாடசாலைகளில் இருந்து 2008ஆம் ஆண்டுக்கு பின்னர் ஓய்வூதியம்பெற்ற 90 சதவீதமான ஆசிரியர்களுக்கு சுற்று நிருபத்துக்கு அமைய அவை வழங்கப்பட்டுள்ளன. ஆனால், வத்துகாமம் கல்வி வலயத்துக்குட்பட்ட மடவளை மதீனா தேசிய பாடசாலை மற்றும் ரஜவெல்ல இந்து தேசியப் பாடசாலைகளில் கடமையாற்றி ஓய்வுபெற்ற ஆசிரியர்;களுக்கு அவ்வாறான நிலுவைப்பணமோ அல்லது அவர்;களுக்கு உரித்தான தொகையோ இதுவரை வழங்கப்படவில்லை என ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே, இப்பணத்தை வழங்குவதற்கு ஆவணஞ் செய்ய வேண்டுமென சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
3 hours ago
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago
4 hours ago