2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

ஓய்வூதியம் வழங்கும் திட்டம் ஆரம்பம்

Niroshini   / 2016 ஓகஸ்ட் 11 , மு.ப. 09:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சிவாணி ஸ்ரீ

அரச சேவையாளர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டு வந்த ஓய்வூதிய கொடுப்பனவு சப்ரகமுவ மாகாண கூட்டுறவுச் சங்க ஊழியர்களுக்கும் வழங்குவதற்கு சப்ரகமுவ மாகாண சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கமைய, சப்ரகமுவ மாகாணத்தின் இரத்தினபுரி, கேகாலை ஆகிய மாவட்டங்களில் உள்ள கூட்டுறவுச் சங்க ஊழியர்களுக்கும் ஓய்வூதிய கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை(09), சப்ரகமுவ மாகாண சபை கட்டடத்தொகுதியின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இதன்போது, மாகாணத்தில் உள்ள கூட்டுறவு சங்க சேவையாளர்கள் 46 பேருக்கு நேற்றைய தினம் ஓய்வூதிய கொடுப்பனவு வழங்கப்பட்டது.

சப்ரகமுவ மாகாண கூட்டுறவு சங்க சேவையாளர்களுக்கு ஓய்வூதிய கொடுப்பனவு வழங்குவது குறித்து 2011ஆம் ஆண்டு சப்ரகமுவ மாகாண சபையினால் அறிமுகப்படுத்தப்பட்டது.

மேற்படி மாகாணத்தில் 116 கூட்டுறவு சங்கங்கள் உள்ளதுடன், அதில் 1,947 பேர் சேவை செய்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

சப்ரகமுவ மாகாண கூட்டுறவு சங்க சேவையாளர்களுக்கு ஓய்வூதிய கொடுப்பனவு வழங்கவென சப்ரகமுவ மாகாண கூட்டுறவு அபிவிருத்தி நிதியிலிருந்து 800 இலட்சம் ரூபாய் நிதி தொகை வழங்கப்பட்டுள்ளது.

இதை தவிர மேற்படி கூட்டுறவு சங்க சேவையாளர்கள் மாதாந்தம் 25 இலட்சம் ரூபாய் நிதி தொகையினை ஓய்வூதியத்துக்காக வழங்கி வருகின்றனர்.

மேற்படி நிகழ்வில், சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத், சப்ரகமுவ மாகாண அமைச்சர்களான ரஞ்ஜித் பண்டார, பானு முனிப்பிரிய மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .