2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

கேகாலை மாவட்டத்துக்கு தற்காலிக கூடாரங்கள் 130 வழங்கி வைப்பு

Sudharshini   / 2016 மே 23 , மு.ப. 09:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட தற்காலிக கூடாரங்களில் 140 கூடாரங்கள் கேகாலை மாவட்டத்துக்கு இன்று(23) வழங்கி வைக்கப்பட்டன.

கேகாலை மாவட்டத்தில் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட  புலத்கொஹுப்பிட்டிய, களுபான, டெனிஸ்வத்த போன்ற தோட்;டங்களுக்கு  மேற்படி கூடாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.  

புளத்கொஹுப்பிட்டியஃசீலானந்த பாடசாலையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாக அபிவிருத்தி அமைச்சர் ப.திகாம்பரம் கலந்துகொண்டு கூடாரங்களை வழங்கி வைத்தார்.

மேலதிகமாக உள்ள 70 கூடாரங்கள்  ஏனைய மாவட்டங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளன.

இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட தற்காலிக கூடாரங்களில், மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சுக்கு 200 கூடாரங்கள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .