2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

கேகாலை வசந்தகால நிகழ்வு

Kogilavani   / 2016 ஏப்ரல் 08 , மு.ப. 10:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சிவாணிஸ்ரீ

எதிர்வரும் தமிழ்,சிங்கள புதுவருடத்தை முன்னிட்டு 23ஆவது ஆண்டும் நடத்தப்படவுள்ள கேகாலை வசந்தகால நிகழ்வு  11ஆம் திகதி கேகாலை சுதந்திர மாவத்தையில் அமைந்துள்ள பொதுச்சந்தை கட்டடத் தொகுதியின் அருகில் நடைபெறவுள்ளது.

சப்ரகமுவ மாகாண சபை, கேகாலை மாவட்ட செயலகம், கேகாலை பொலிஸ் நிலையம், சப்ரகமுவ மாகாண அபிவிருத்தி நிர்மாண மற்றும் இயந்திர உபகரண அதிகார சபை, மஹிபால ஹேரத் ஜனசாஹன அமைப்பு என்பன இணைந்து மேற்படி வசந்தகால நிகழ்வை வருடந்தோரும் நாடாத்தி வருகின்றது.

மேற்படி வசந்தகால நிகழ்வில் சைக்கிள் ஓட்டப்போட்டி, யானை ஓட்டப்போட்டி, முச்சக்கர வண்டி ஓட்டுதல் போட்டி, ஆண்,பெண் ஓட்டப்போட்டி, அழகுராணி போட்டி உட்பட 37க்கும் அதிகமான போட்டிகள் நடைபெறவுள்ளது.

மேற்படி நிகழ்வில் சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத், கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கனக ஹேரத் மற்றும் ஆளும்கட்சி எதிர்க்கட்சி நாடாளுமன்ற மாகாண சபை உறுப்பினர்கள், சப்ரகமுவ மாகாண பிரதான செயலாளர் எச்.பி.குலரத்ன, பிரதான அமைச்சின் செயலாளர் பி.எம்.பி.என்.பெலிகம்மன, உதவி செயலாளர் கபில பெரேரா, கேகாலை மாவட்ட செயலாளர் அபேவிக்ரம வனசூரிய உட்பட முக்கிய அதிகாரி பலரும் கலந்துகொள்ள  உள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .