2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

குட்டி சிறுத்தையுடன் குதூகளித்த சிறார்கள்

Sudharshini   / 2016 மே 24 , மு.ப. 10:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்

பூனைக்குட்டியென நினைத்து சிறுத்தைக்குட்டியுடன் சிறுவர்கள் விளையாடிய சம்பவமொன்று, பொகவந்தலாவை, கொட்டியாகலை கீழ் பிரிவு தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது, திங்கட்கிழமை (23) மாலை, அப்பகுதியிலுள்ள சிறுவர்கள் இணைந்து விளையாடிக் கொண்டிருந்தனர். அவ்வேளை, அங்கு நின்றுக்கொண்டிருந்த சிறுத்தைக் குட்டியை, பூனைக்குட்டியென நினைத்து தூக்கி விளையாடியுள்ளனர்.

இதனை அவதானித்த ஊர்மக்கள், அது தொடர்பில் பொகவந்தலாவை பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். சிறுத்தைக் குட்டியை பொறுப்பேற்ற பொலிஸார், சிறுத்தைக் குட்டியை நல்லதண்ணி வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்;.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .