Gavitha / 2016 ஜூன் 25 , மு.ப. 03:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.சுஜிதா, எஸ்.கணேசன்
கூட்டுறவு மொத்த விற்பனை நிலையத்தில் பொருட்களின் விலைகள் ஒப்பீட்டளவில் குறைவாக இருப்பதால், பெருந்திரளான மக்கள் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக, கூட்டுறவு மொத்த விற்பனை நிலையங்களுக்கே செல்கின்றனர். தரம் வாய்ந்த பொருட்களை நியாயமான விலையில் பெற்றுக்கொள்ள முடியும் என்ற நோக்கிலேயே பொதுமக்கள் அங்கு பொருட்களை கொள்வனவு செய்கின்றனர்.
இவ்வாறிருக்க, கொட்டக்கலையிலுள்ள சதொச விற்பனை நிலையத்துக்குச் செல்லும் வாடிக்கையாளர்களுக்க சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாக, வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர். 500 ரூபாய்க்கு மேல் பொருட்களை கொள்வனவு செய்தால் மாத்திரமே சீனியை கொள்வனவு செய்ய முடியும் என்றும் எந்தவொரு பொருளாக இருந்தாலும் 1 கிலோகிராமுக்கும் மேல் இனி கொள்வனவு செய்ய முடியாது என்றும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக, வாடிக்கையாளரக்ள் விசனம் தெரிவித்தனர்.
அரசாங்கத்தின் பொறுப்பிலுள்ள ஒரு விற்பனை நிலையம் இவ்வாறு நியாயமற்று நடந்துக்கொள்வது எந்த விதத்திலும் நியாயமற்றது என்று வாடிக்கையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago