2026 ஏப்ரல் 12, ஞாயிற்றுக்கிழமை

குடிநீர் விநியோகம் தடைப்பட்டதாக பிரதேச மக்கள் கவலை

Kogilavani   / 2016 ஏப்ரல் 08 , மு.ப. 10:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமசந்திரன்

பத்தனை நகரில் நேற்று முன்தினம் முதல் குடிநீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, திம்புள்ள பத்தனை ஊடாக நாவலப் பிட்டிய வரையிலான பிரதான பாதை புனரமைக்கப்படவுள்ளதாக கூறி வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் பத்தனை நகரின் வீதியோரங்களில் வீதிகளை அகலப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுப்பட்டபோது கீழே காணப்பட்டகு டிநீர் குழாய்கள் பல உடைக்கப்பட்டுள்ளன.

இதனால் அப்பிரதேசத்தைச் சேர்ந்த 100இற்கும் மேற்ப்பட்ட குடும்பங்கள் கடந்த இரண்டு நாட்களாக குடிநீர் இன்றி சிரமப்படுகின்றனர்.
இதனை வீதி அபிவிருத்தி அதிகார சபையினர், நுவரெலியா பிரதேச சபையின் அனுமதி பெறாமல் மேற்கொண்டுள்ளதாக பிரதே சமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

தற்போது பிரதேச மக்கள் குடிநீர் தேவையை பத்தனை முத்துமாரியம்மன் ஆலயத்திலுள்ள ஊற்று கிணற்றிலிருந்து பெற்று பூர்த்தி செய்து வருகின்றனர்.

புதுவருட பிறப்பு அண்மித்துள்ள இவ்வேளையில், குடிநீர் இல்லா பிரச்சினை மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்ப்படுத்தியுள்ளது.
எனவே, உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது தொடர்பாக கவனம் செலுத்தி குடிநீரை பெற்றுத்தறுமாறு பிரதே சமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக நுவரெலியா பிரதேச சபை அதிகாரி ஒருவரோடு தொடர்பு கொண்டபோது, 'பத்தனை நகர மக்களின் முறைப்பாட்டையடுத்து இப்பிரச்சினை குறித்து வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் கவனத்துக்;கு கொண்டுவந்திருக்கின்றோம். இதனை உடனடியான மீளமைத்து தருவதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபையினர் எங்களிடம் உறுதியளித்துள்ளனர்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .