2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

காட்போட் பெட்டிக்குள் குவாக்... குவாக்... சடலம்

Princiya Dixci   / 2016 ஜனவரி 27 , பி.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேயிலைத் தூளை எடுத்துச்செல்வதைப் போல, பிறந்து 45 நாட்களேயான சிசுவின் சடலத்தை, காட்போட் பெட்டிக்குள் வைத்து முச்சக்கரவண்டியில் எடுத்துச்சென்றமையால், அவ்வண்டியின் சாரதிக்கும், சடலத்தை எடுத்துச்சென்றவருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு அல்லோலகல்லோலமாகிய சம்பவமொன்று கம்பளை, புப்புரஸ்ஸ பகுதியில் செவ்வாய்கிழமை (26) இடம்பெற்றுள்ளது.

ஸ்தலத்துக்கு விரைந்த கம்பளை, புப்புரஸ்ஸப் பொலிஸ் காவலரனில் கடமையாற்றிய பொலிஸார், இருவருக்கும் இடையிலான வாய்த்தர்க்கத்தை முடிவுக்கு கொண்டுவந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

புஸ்ஸல்லாவ பெல்டா தோட்டத்தில் வசிக்கும் ஒருவரின், 45 நாட்களேயான சிசு, திடீர் சுகயீனமடைந்துள்ளது. அச்சிசுவை, அவர்களுடைய பெற்றோர், பன்விலதென்ன வைத்தியசாலையில் உடனடியாக அனுமதித்தனர். காய்ச்சல் கூடிவிட்டதால், அச்சிசுவை வைத்தியர்கள், கம்பளை வைத்தியசாலைக்கு மாற்றினர். எனினும், அங்கு அந்த சிசு மரணித்துவிட்டது.

வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட மரண விசாரணையில், நிமோனியா காய்ச்சலினால் அந்த சிசு மரணமடைந்துவிட்டதாக அறிக்கையிடப்பட்டதுடன், சிசுவின் சடலத்தை வீட்டுக்குகொண்டு செல்வதற்கும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார ரீதியில் பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுத்திருந்த அந்த சிசுவின் தந்தைக்கு, சடலத்தை வீட்டுக்கு கொண்டு செல்வது பெரும் பிரச்சினையாக இருந்தது. மலர்ச்சாலை வாகனத்தை வாடகைக்கு அமர்த்துவதும் பெரும் சிக்கலாகவே இருந்தது. 

அதன்பின்னர், தனக்குத் தெரிந்த முச்சக்கரவண்டியை வாடகைக்கு அமர்த்திய சிசுவின் தந்தை, தன்னுடைய மகளின் சடலத்தை காட்போட் பெட்டியிலிட்டு அதனைத் தனது மடியில் வைத்துகொண்டு வீட்டை நோக்கி பயணித்துள்ளார்.

அந்த முச்சக்கரவண்டி, கஹவத்தைப் பகுதியில் வைத்து நின்றுவிட்டது. எனினும், சமயோசிதமாக யோசித்த முச்சக்கரவண்டியின் சாரதி, வீதியில் பயணித்த மற்றுமொரு முச்சக்கரவண்டியை நிறுத்தி, பெட்டியுடன் அவரை ஏற்றிவிட்டுள்ளார். 

முச்சக்கரவண்டி பயணித்துகொண்டிருந்த போது, பின்னால் இருந்தவரிடம் பேச்சுக்கொடுத்த சாரதி, பெட்டியில் என்ன இருக்கென்று வினவுகையில், தேயிலைத் தூள் இருப்பதாக, பயணித்தவர் தெரிவித்துள்ளார்.

பேச்சோடு பேச்சாக பயணித்துக்கொண்டிருந்த போது, முச்சக்கவண்டி சாரதியின் அலைபேசிக்கு, அவருடைய நண்பரிடமிருந்து அழைப்பொன்று வந்துள்ளது. உன்னுடன் கொண்டுசெல்லப்படும் காட்போட்பெட்டியில் சடலமொன்று இருக்கிறதாகத் தெரிவித்து, அழைப்பை அவர், துண்டித்துவிட்டார்.

திக்குமுக்காடிப் போன, சாரதியோ பெட்டியுடன் பயணித்தவரிடம் சண்டையிடவே, பெட்டியில் இருப்பது சடலம்தான் என்று ஒத்துக்கொண்டுள்ளார்.

இதனையடுத்தே இவ்விருவருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. விடயம் காவலரன் வரையும் செல்லவே, ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார், அச்சடலம், சட்டரீதியாகவே கொண்டுசெல்லப்படுவதை உறுதிப்படுத்திக்கொண்டு, மற்றுமொரு முச்சக்கரவண்டியை வாடகைக்கு அமர்த்தி, சடலத்துடன் அவரை வீட்டுக்கு அனுப்பிவைத்துள்ளனர். 


  Comments - 0

  • raaj Thursday, 28 January 2016 08:06 AM

    please change this news heading ..

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .