Sudharshini / 2015 ஒக்டோபர் 19 , மு.ப. 11:10 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ரஞ்சித் ராஜபக்ஷ
நோர்வூட் ரொக்வூட் தோட்டம் மற்றும் ஹட்டன் மற்றும் சமனலகம ஆகிய தோட்டங்களுக்கு தேசிய கட்டட ஆய்வு நிறுவனத்தின் நுவரெலியா மாவட்ட காரியாலய அதிகாரிகள், இன்று திங்கட்கிழமை (19) விஜயமொன்றை மேற்கொண்டு அங்கு சோதனைகளை மேற்கொண்டனர்.
இதன்போது, ஹட்டன் சமனலகம பகுதியில் 12 குடும்பங்கள் மண்சரிவு அபாயத்துக்குள்ளாகியிருப்பதாகவும் நோர்வூட், ரொக்வூட் தோட்டப்பகுதியும் மண்சரிவு அபாயத்துக்குள்ளாகிவருவதாக தெரிவித்தனர்.
எனவே, இப்பகுதிகளில்; மழை தொடருமானால் அங்கு வாழும் மக்களை தற்காலிகமாக வேறு இடங்களுக்கு செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

8 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
1 hours ago