2026 ஏப்ரல் 12, ஞாயிற்றுக்கிழமை

காணி உறுதி வழங்க நடவடிக்கை

Sudharshini   / 2016 பெப்ரவரி 14 , மு.ப. 12:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

மாத்தளை மாவட்டத்தில் அரசாங்க காணிகளில் வசிப்போருக்கு, காணி உறுதிகளை வழங்கும் திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக மாத்தளை மாவட்ட செயலாளர் நீல் டீ அல்விஸ் தெரிவித்தார்.

'அரச காணிகளில் வசிப்பவர்கள், வீட்டுக்கடன் பெற்றுக்கொள்ளும் போதும் பாடசாலைகளுக்கு பிள்ளைகளை சேர்க்கும் போதும் காணி உறுதி இன்மையால்; பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர்' என அவர் தெரிவித்தார்.

இவ்விடயங்களை கருத்திற்கொண்டே அரச காணிகளில் வசிக்கும் அனைவருக்கும் காணி உறுதிகளை பெற்றுக்கொடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .