Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2017 மார்ச் 30 , மு.ப. 07:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக்
கண்டி -மாத்தளை ஏ- 09 வீதியில் வாகனங்களில் பயணிக்கும்போது குப்பைகளை எறிந்துவிட்டுச் சென்ற 15 பேரை, சந்தேகத்தின் பேரில், கடந்த ஒரு மாத கால பகுதிக்குள் கைதுசெய்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
கண்டியில் இருந்து யாழ்ப்பாணம் செல்லும் பிரதான பாதையான ஏ -09 வீதியில், வாகனங்களில் பயணிப்போர், குப்பைகளை எறிந்துவிட்டுச் செல்வதாக பரவாக இடம்பெற்று வந்தது. இதனால், சுகாதார பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளன.
எனவே, இதனை தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கையை கண்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கமைவாக, கண்டி-மாத்தளை ஏ9 வீதியில் பல இடங்களில், சீசீடிக்கள் பொருத்தப்பட்டிருந்தன. இவற்றின் உதவியுடனயே, மேற்படி 15 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
ஏ -09 வீதியிலும் சூழவுள்ள ஏனைய வீதிகளிலும் குப்பைகளை கொட்டுபவர்களுக்கு எதிராக, தராதரம் பாராமல் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று, கண்டி பொலிஸார் மேலும் கூறினர்.
5 minute ago
6 minute ago
7 minute ago
16 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
6 minute ago
7 minute ago
16 minute ago