Kogilavani / 2017 மே 17 , மு.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்
திம்புள்ள- பத்தனை பொலிஸ் பிரிவு, எதன்சைட் தமிழ் வித்தியாலய வளாகத்திலிருந்த கொய்யமரத்திலிருந்த விழுந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சுப்பிரமணியம் மதுஸான் (வயது 14) என்ற மாணவன், சிகிச்சைப்பலனின்றி, செவ்வாய்க்கிழமை மாலை உயிரிழந்துள்ளார்.
எதன்சைட் தோட்டத்தைச் சேர்ந்த மேற்படி மாணவன், தரம் ஒன்பதில் கல்வி பயின்று வந்துள்ளார். இவர், செவ்வாய்க்கிழமை மாலை, பாடசாலை முடிந்து வீடுச் செல்ல முற்பட்ட வேளையில், பாடசாலையின் வளாகத்திலிருந்த கொய்யாமரத்தில் ஏறி, காய்களை பறிக்க முற்பட்டுள்ளார்.
இதன்போது, காலிடறி கீழே விழுந்த மாணவன், டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டப் போதிலும், அங்கு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக, வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.



57 minute ago
2 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
2 hours ago
8 hours ago
8 hours ago