Niroshini / 2016 மே 31 , மு.ப. 11:43 - 0 - {{hitsCtrl.values.hits}}

-சிவாணி ஸ்ரீ
கொரியா நாட்டின் அணுசரனையுடன் நாட்டில் அனைத்து மாகாணத்திலும் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பிரதேச வானொலி சேவையை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று நாடாளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை பிரதி அமைச்சர் கருணாரத்ன பரணவிதான தெரிவித்தார்.
சப்ரகமுவ மாகாண சபையும் மத்திய அரசாங்கமும் இணைந்து சப்ரகமுவ மாகாணத்தில் அமைக்கப்படவுள்ள “சப்ரகமுவ வானொலி சேவை” ஆரம்பிப்பது குறித்து இன்று(31) சப்ரகமுவ மாகாண சபை கட்டடத்தொகுதியில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மேற்படி மாகாண மட்டத்தில் வானொலி சேவை ஆரம்பிப்பதன் மூலம் நாட்டின் அபிவிருத்தி குறித்து மக்களுக்கு நேரடியான தகவலை பெற்று கொள்ள முடியும். அத்தோடு, கல்வியை வானொலி மூலம் கற்றுகொள்வதற்கும் விசேட வேலைத்திட்டங்களை அரசாங்கத்தின் ஊடாக நடைமுறைபடுத்த எதிர்பார்க்கின்றோம்.
அதற்கு கொரியா அரசாங்கம் தேவையான பௌதிக வளங்கல் என்பன பெற்று கொடுப்பதற்கு தயாராக உள்ளதாக உறுதியளித்துள்ளது.
எனவே, இதனை கருத்தி கொண்டு நாட்டின் அனைத்து மாகாணத்தையும் உள்ளடக்கி உயர்தரமான தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி பிரதேச வானொலி சேவை ஆரம்பிப்பதற்கு அரசாங்கத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நாடாளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை பிரதி அமைச்சர் கருணாரத்ன பரணவிதான மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில், சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத், சப்ரகமுவ மாகாண சபை உறுப்பினர் சலித்த கருணாரத்ன, மாகாண பிரதான செயலாளர் எச்.பி.குலரத்ன, பிரதான அமைச்சின் செயலாளர் பி.எம்.பி.என்.பெலிகம்மன, கலாநிதி பிரதீப் வீரசிங்க ஆகியோர் கலந்து கொண்டனர்.
5 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago