2026 ஏப்ரல் 16, வியாழக்கிழமை

கூரையைப் பிரித்து கொள்ளை

Sudharshini   / 2015 டிசெம்பர் 15 , மு.ப. 10:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

அக்குறணை,  பங்கொள்ளாமட பிரதேசத்திலுள்ள  வீடொன்றில்; கூரையை பிரித்து, 86,000  ரூபாய் பெறுமதியான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக அலவத்துகொடை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

வீட்டின் உரிமையாளர்கள் வெளியில் சென்றுவிட்டு திங்கட்கிழமை (14) வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்த போது, வீட்டிலிருந்த  தொலைகாட்சி மற்றும் தங்க மோதிரங்கள் ஐந்து உட்பட பல பொருட்கள் திருடப்பட்டுள்ளமையை அறிந்து பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .