2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

கிளாபொக்க தொழிலாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

Sudharshini   / 2016 பெப்ரவரி 03 , பி.ப. 12:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

கு.புஸ்பராஜ்

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, அக்கரப்பத்தனை கிளாஸ்கோ தோட்டத்தின் கிளாபொக்க யுnஉhழசபிரிவு தொழிலாளர்கள் இன்று (3), பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.

இத்தோட்டத்தில் நீண்ட காலமாக தொழில்புரியும் வெளிக்கள அதிகாரி, தொழிலாளர்களிடம் மிகவும் மோசமாக நடந்துகொள்வதாகவும் இவ்விடயத்தை தோட்ட அதிகாரியிடம் தெரிவித்த போதிலும், அவர் அதனை கவனத்தில் கொள்ளவில்லை எனவும் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

பெண் தொழிலாளர்கள் காலையில் நேரத்துடன் தொழிலுக்கு சென்றாலும் மாலை 5 மணிவரை தொழில் செய்ய வேண்டி கட்டாயப்படுத்தப்படுவதாகவும்   தொழில்புரியும்போது விபத்துக்கள் ஏற்பட்டாலும் அதற்கு விடுமுறை வழங்கப்படுவதில்லை என்றும் அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இது தொடர்பில் தோட்டத் தொழிலாளர்கள் கூறுகையில், 'தோட்டத்தில்  உள்ள லயன் வீடுகளுக்கு, நீண்ட காலமாக கூரைத் தகரம் மாற்றிக் கொடுக்கப்படவில்லை. சுகாதார நடவடிக்கைகளை முறையாக மேற்கொள்ளாமல்  தோட்ட நிர்வாகம் அசமந்தபோக்கை கடைபிடிக்கின்றது.  பிரச்சினைகள் ஏற்பட்டால் பொலிஸில் வைத்து பார்த்துகொள்வோம் என தோட்ட அதிகாரி பொறுப்பற்ற பதிலை கூறுகின்றார்.  இதுபோன்ற பல்வேறு பிரச்சினைகள் தோட்ட நிர்வாகத்தினால் தீர்க்கப்படாமல் உள்ளன.

இப்பிரச்சினையை பேசி தீர்ப்பதற்கான நேரத்தை தோட்ட அதிகாரி தொழிற்சங்க அதிகாரிகளுக்கு வழங்குவதில்லை. எனவே, இவற்றுக்கு தீர்வுத்தர வேண்டும் எனக் கோரியே பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடுவதாக' அவர்கள் கூறினர்.

இதன்போது மேற்படி தோட்டத்தை சேர்ந்த சுமார் 110 தொழிலாளர்கள், பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .