2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

குளவிக்கொட்டுக்கு இலக்காகி 11 பேர் பாதிப்பு

Sudharshini   / 2016 மார்ச் 16 , மு.ப. 10:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்வராஜா

பதுளை, ஹல்துமுல்லை, இதல்கஸ்ஹின்ன தோட்டத்தில் குளவிக்கொட்டுக்கு இலக்காகிய  8 ஆண்கள், 3 பெண்கள் என 11 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் தியத்தலாவை வைத்தியசாலையில் இன்று (16) அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் இரு பெண்களும் ஆண்ணொருவரும் தியத்தலாவை வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் அவர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளதெனவும் வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இன்று (16) காலை தேயிலைத் தோட்டத்தில் கொழுந்துப் பறித்துக்கொண்டிருந்தவர்களே இவ்வாறு குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .