Kogilavani / 2016 ஜூன் 15 , மு.ப. 04:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன்
குளவிக் கொட்டு, சிறுத்தை தாக்குதலுக்கு உள்ளாகும் தொழிலாளர்களுக்குத் தோட்ட நிர்வாகங்கள் எந்தவித சலுகைகளையும் வழங்குவதில்லை என தொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
மேற்படி சம்பவங்களால் பாதிக்கப்படும் தொழிலளர்களுக்கு அன்றைய தினத்துக்குரிய சம்பளத்தை மட்டுமே தோட்ட நிர்வாகம் வழங்குவதாகவும் வைத்தியசாலைகளில் 2,3 நாட்கள் தங்கி சிகிச்சைப் பெறும்போது அவர்களுக்கு அத்தினங்களுக்குரிய சம்பளம் வழங்கப்படுவதில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
தேயிலை மலைகள் முறையாக பராமரிக்கப்படாமையால் சிறுத்தை போன்ற காட்டு விலங்குகள் தேயிலைச் செடிகளுக்கு இடையில் தங்குவதாகவும் குளவிகள் அதிகமாக கூடு கட்டுவதாகவும் இதனால் வரும் பாதிப்புக்களை தொழிலாளர்களாகிய தாமே எதிர்கொள்வதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர்.
எனவே, இது தொடர்பில் உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago