Sudharshini / 2016 ஜூன் 16 , மு.ப. 10:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.சுஜிதா
லிந்துலை, மற்றும் பாம்ஸ்டன் ஆகிய தோட்டங்களில் குளவிக்கொட்டுக்கு இலக்கான 12 தொழிலாளர்கள் இன்று (16) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
லிந்துலை - மௌசெல்ல தோட்டத்தில் குளவிக் கொட்டுக்கு இலக்காகிய 6 தொழிலாளர்கள் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று (16) காலை தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்தவர்களே இவ்வாறு குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
நான்கு பேர் சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பியுள்ள நிலையில் மேலும் இருவர் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இதேவேளை, தலவாக்கலை ரட்ணகிரிய பாம்ஸ்டன் தோட்டத்தில் குளவிக்கொட்டுக்கு இலக்காகிய 6 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
9 hours ago
11 Apr 2026
11 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
11 Apr 2026
11 Apr 2026