2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

காவி உடை திருடனுக்கு வலைவீச்சு

Kogilavani   / 2017 ஏப்ரல் 25 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாலித ஆரியவன்ச

பதுளை-கொஹொவிலகந்துர ஸ்ரீ போதிருக்காராமவுக்கு உரித்தான களஞ்சியசாலையில் வைக்கப்பட்டிருந்த 7 காவி உடைகள் மற்றும் அடபிரிகர (பிக்குமார் பயன்படுத்தும் 8 பொருட்கள் அடங்கிய பொதி)களை திருடிச் சென்ற நபரை, கைதுசெய்வதற்கான நடவடிக்கையில், பதுளை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய நபர், களஞ்சியசாலையின் சாளரத்தை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்துள்ளதுடன், அங்கு வைக்கப்பட்டிருந்த காவி உடைகள் ஏழு மற்றும் மூன்று அடபிரிகரகள் என்பவற்றை திருடிக்கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.

திருடிய பொருட்களுடன் மேற்படி நபர், பஸ்ஸுக்காக காத்திருந்தபோது, அப்பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸார், குறித்த நபர் மீது சந்தேகம் கொண்டு சோதனை செய்ய முற்பட்டுள்ளனர். இதன்போது, குறித்த நபர் தான் கொண்டு வந்திருந்த உர பையையை அவ்விடத்திலேயே வீசிவிட்டு தப்பியோடியுள்ளார்.

உரப்பையை சோதனை செய்த பொலிஸார், அப்பையிலிருந்து மேற்படிப் பொருட்களை மீட்டுள்ளனர். எனினும், பொருட்களை மீட்கும் வரை குறித்த விகாரையிலிருந்து எவ்வித முறைப்பாடும் கிடைக்கப்பெறவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய நபரை கைதுசெய்வதற்கான நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .