Sudharshini / 2016 ஜனவரி 25 , மு.ப. 12:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக்
சமஷ்டி ஆட்சியா? ஒற்றையாட்சியா? என்ற வசன ஜாலங்களை ஒதிக்கி வைத்துவிட்டு, இலங்கையர் என்ற அடிப்படையில் காலத்தைக் கழிக்கும் நிலையை தோற்றுவிக்கும் ஓர் அரசியல் அமைப்பே இன்றைய இலங்கை சமுதாயத்துக்கு தேவை என பேராதனை பல்கலைகழக உப-வேந்தர் பேராசிரியர் உபுல் திஸாநாயக்க தெரிவித்தார்.
பேராதனை பல்கலைக்கழக செனட் கட்டடத்தில் நேற்று (24) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், 'இன்றைய அரசியல் அமைப்பின்படி 20ஆவது திருத்தமா அல்லது புதிய அரசியல் அமைப்பா என தீர்மானம் எடுக்கப்படவில்லை. எந்த தீர்மானமாயினும் முப்பது வருட கசப்பு உணர்வுகளை மீண்டும் தோற்றுவிக்கும் வகையில் அது அமையக் கூடாது' என அவர் மேலும் தெரிவித்தார்.
இங்கு உரையாற்றிய நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் (கபே) அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் தெரிவிக்கையில்,
'இன்று புதிய அரசியல் அமைப்பு பற்றி அதிகம் பேசப்படுகின்றது. அரசியல் அமைப்பு தொடர்பான கருத்துக்களை பிரதிபலிக்கும் விடயத்தில் அரசியல் துறை சார்ந்தவர்களின் கருத்துக்களுடன் புத்திஜீவிகளது கருத்துக்களும் உள்வாங்கப்பட வேண்டும். அவற்றை உள்வாங்கி சட்டமூலத்தை நிறைவேற்றும் பொறுப்பு நாடாளுமன்றத்துக்கு உள்ளது.
லால் விஜேநாயக்க தலைமையிலான அரசியல் சீர்த்திருத்த குழு பற்றி பொதுமக்களிடம் தவறான கருத்து ஒன்று நிலவுகின்றது. லால் விஜேநாயக்க குழு சமர்பிப்பது அரசியல் அமைப்போ அல்லது அரசியல் அமைப்புக்கான திருத்தங்கலோ அல்ல. பொதுமக்களது கருத்துகளை திரட்டி கோவைப்படுத்தி உரியவர்களுக்கு சமர்ப்பிக்கும் பொறுப்பு ஆகும்.
எனவே, இங்கு இறைமை கூடியவர்களாக பொதுமக்கள் உள்ளனர். எனவே, பொதுமக்களிடம் தெளிவு வேண்டும். அதற்காக மக்களை தயார்ப்படுத்துவது, வழி நடத்துவது போன்ற பாரிய பொறுப்புக்கள் புத்தி ஜீவிகளுக்கும் துறை சார்ந்தவர்களுக்கும் உண்டு. அதனையே நாம் இன்று பேராதனை பல்கலைகழகத்தின் ஊடாக நிறேவேற்ற முயற்சிக்;கின்றோம்.
இது போன்ற இன்னும் பல கலந்துறையாடல்களையும் ஒழுங்கு செய்ய உள்ளோம். ஆனால், நாம் எதை நிறைவேற்றினாலும் அது மக்களுக்கு இடையே புரிந்துணர்வு, இன ஒற்றுமை, சக வாழ்வு போன்றவற்றை ஏற்படுத்தக் கூடியதாக இருக்க வேண்டும்;' என்றார்.
29 minute ago
44 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
44 minute ago
1 hours ago