Editorial / 2026 ஏப்ரல் 15 , மு.ப. 08:48 - 0 - {{hitsCtrl.values.hits}}

செ.தி.பெருமாள்
திம்புள்ள - பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை கொமர்சல் பகுதியில், 13 ஆம் திகதியன்று பிற்பகல் தனியார் பேருந்தும் முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.
கொமர்சல் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கும் ஆசிரியர் பயிற்சி கலாசாலைக்கும் இடையில் மாலை 2:50 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
மேபீல்ட் பகுதியிலிருந்து கொட்டகலை நோக்கிப் பயணித்த சிறிய ரக தனியார் பேருந்து ஒன்றும், கொட்டகலையிலிருந்து ஹட்டன் நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டியுமே இவ்வாறு மோதியுள்ளன.
இந்த விபத்தில் முச்சக்கர வண்டியின் சாரதி மற்றும் அதில் பயணித்த மற்றொருவர் என இருவர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் உடனடியாக கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
பேருந்தின் தடை (Brake) செயலிழந்தமையே இந்த விபத்திற்குப் பிரதான காரணமாக இருக்கலாம் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் சந்தேகிக்கப்படுகிறது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை திம்புள்ள - பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
15 Apr 2026
15 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Apr 2026
15 Apr 2026