Editorial / 2020 செப்டெம்பர் 02 , பி.ப. 06:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.செல்வராஜா
பதுளை- வெவல்ஹின்ன பெருந்தோட்டத்தில், நேற்று இரவு பெய்த கடும் மழை காரணமாக, 15 தொழிலாளர் குடியிருப்புகள் சேதமடைந்துள்ளன என்று, பதுளை பிரதேச செயலகம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, 15 வீடுகளைச் சேர்ந்த 75 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவத்தைக் கேள்வியுற்று ஸ்தலத்துக்கு விரைந்த பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ், பாதிக்கப்பட்ட மக்களுடன் கலந்துரையாடியதுடன், உலர் உணவுப் பொருள்களையும் வழங்கி வைத்தார்.
அத்துடன், சேதங்களுக்குள்ளாகிய தொழிலாளர்களின் வீடுகளின் திருத்த வேலை தொடர்பாக, தோட்ட முகாமையாளர், பிரதேச செயலாளருடன் கலந்துரையாடினார்.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago