Editorial / 2020 ஓகஸ்ட் 31 , பி.ப. 03:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன்
மலையக மக்கள் முன்னணியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் அனுஷா சந்திரசேகரன் நீக்கப்பட்டுள்ளார் என்று அக்கட்சியின் செயலாளர் நாயகம் ஏ.லோரன்ஸ் தெரிவித்துள்ளார்.
கட்சியின் அடிப்படை உறுப்புரிமை, பிரதி பொதுச் செயலாளர் பதவி ஆகியவற்றிலிருந்தே அவர் நீக்கப்பட்டுள்ளார் என்று, மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் ஏ.லோரன்ஸ் தெரிவித்துள்ளார்.
மலையக மக்கள் முன்னணியின் தேசிய சபைக் கூட்டம், கட்சியின் தலைமைக் காரியாலயத்தில், இன்று (31) நடைபெற்றது. இதன்போதே மேற்படித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் பல்வேறுத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
குறிப்பாக, அனுசா சந்திரசேகரன் கட்சியின் யாப்புக்கு முரணாக செயற்பட்டதன் காரணமாக அவரை அனைத்துப் பதவிகளில் இருந்தும் வெளியேற்றுவது எனவும் எதிர்வரும் காலத்தில் அனுசா சந்திரசேகரன், மலையக மக்கள் முன்னணியின் கொடியையோ கட்சியின் நிறத்தையோ அல்லது அவர் ஏற்கெனவே வகித்த பிரதி பொதுச் செயலாளர் நாயகம் என்ற பதவியையோ எந்தச் சந்தர்ப்பத்திலும் பயன்படுத்த முடியாது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மலையக மக்கள் முன்னணியின் ஓர் அங்கமான பட்ட ஆசிரியர் முன்னணியின் செயலாளராக செயற்பட்ட எஸ்.ரவீந்திரனை, கட்சியின் அனைத்துப் பதவிகளில் இருந்தும் வெளியேற்றுவதாகவும் மிக விரைவில் புதிய ஆசிரியர் முன்னணியை உருவாக்குவதற்கும் தீர்மானிக்கபட்டது.
மலையக மக்கள் முன்னணியின் ஓர் அங்கமாக தோட்டச் சேவையாளர்களை உள்வாங்கி அவர்களுக்காக ஓர் அமைப்பை ஏற்படுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மலையக மக்கள் முன்னணியின் நிதிச் செயலாளராக செயற்பட்ட பேராசிரியர் விஜயசந்திரனை பிரதி பொதுச் செயலாளராக ஏகமனதாக நியமிக்கவும் கட்சிக்காக 25 பேர் கொண்ட புதிய நிர்வாக சபை ஒன்றை ஏற்படுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டதாக, செயலாளர் நாயகம் ஏ.லோரன்ஸ் மேலும் தெரிவித்துள்ளார்.
2 hours ago
19 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
19 Apr 2026