Editorial / 2018 மார்ச் 22 , பி.ப. 04:27 - 0 - {{hitsCtrl.values.hits}}


எஸ்.சுஜிதா, ஆ.ரமேஸ், எஸ்.கணேசன், கு.புஸ்பராஜ்
தோட்ட அதிகாரியின் பக்கச்சார்ப்பான செயற்பாட்டைக் கண்டித்து, தலவாக்கலை பெருந்தோட்ட நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பெரிய மட்டுக்கலைத் தோட்டத் தொழிலாளர்கள், தோட்டத் தொழிற்சாலைக்கு முன்பாக, இன்று (23) காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரிய மட்டுக்கலை தோட்டத்தில் தொழில்புரியும் வெளிக்கள உத்தியோகத்தர் ஒருவருக்கும் தொழிலாளர் ஒருவருக்குமிடையில், தொழில் விடயத்தில், கடந்த மாதம் 16ஆம் திகதி முரண்பாடு ஏற்பட்டுள்ளதுடன், பின்னர் அது கைகலப்பாக மாறியுள்ளது.
இதனால், தோட்ட நிர்வாகம், இவ்விருவரையும் பணிநீக்கம் செய்தது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, இருவரும் லிந்துலை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வந்த பொலிஸார், மேற்படி இருவருக்கு இடையிலும் சமரசத்தை ஏற்படுத்தினர். அத்துடன், குறித்த இருவருக்கும் தொழில் வழங்குமாறு, தோட்ட அதிகாரிக்கும் அறிவுரை வழங்கியுள்ளனர்.
எனினும், தோட்ட அதிகாரி, வெளிக்கள உத்தியோகத்தருக்கு மட்டும் தொழில் வழங்கியுள்ளாரென்றும் தொழிலாளிக்கு தொழில் வழங்க மறுத்துள்ளாரென்றும் தெரியவருகிறது.
இவ்விடயத்தைக் கண்டித்து, தோட்டத் தொழிலாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டதுடன், நேற்று (23) ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
8 hours ago
9 hours ago
9 hours ago
20 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago
9 hours ago
20 Dec 2025