Kogilavani / 2015 டிசெம்பர் 21 , மு.ப. 05:49 - 0 - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்
நாட்டில் சகல வசதிகளையும் கொண்ட 300 பாடசாலைகளை அமைக்கும் திட்டத்தின் கீழ், கண்டியிலும் நுவரெலியாவிலும் சகல வசதிகளையும் கொண்ட நீண்டகால பயன்பாட்டு அடிப்படையில் பயனடையக்கூடிய இரு தமிழ் மொழி மூல பாடசாலைகளை அமைக்க கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வீ.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
கண்டியில் ஞாயிற்றுக்கிழமை(20) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை கூறினார்.
'1815ஆம் ஆண்டு ஆங்கிலேயரால் கண்டி கைப்பற்றப்பட்டதன் பின்னர்தான் இந்தியாவில் இருந்து தொழிலாளர்;களாக கண்டித் தமிழர்கள் அழைத்துவரப்பட்டனர். மலையகத்தைப் பொருத்தவரை கண்டி பிரதான இடத்தை வகிக்கின்றது. இதேவேளை, கண்டி என்பது பௌத்தர்களின் புனித தளமாக உள்ளது. மரபு ரீதியாக மலையகத் தமிழர்;களை இந்தியா போன்ற நாடுகளில் கண்டித் தமிழர்; என்றே விழிப்பர். இவ்வாறான நிலையில் கண்டியில் சிறுபான்மையினராக தமிழ்மக்கள் வாழ்ந்து வருகின்றனர்' என்றார்.
'கண்டி தமிழர்களுக்கென்று முழுமையான தமிழ் பாடசாலை அன்று முதல் இன்றுவரை கண்டியில் இல்லை. அரசாங்கம் தேசிய ரீதியில் சகல வசதிகளையும் கொண்ட 300 பாடசாலைகளை அமைக்க திட்டமிட்டுள்ளது. பிரதேச செயலாளர் பிரிவு ரீதியாக ஒன்று அல்லது இரண்டு பாடசாலைகளாக அவை அமைக்கப்படவுள்ளன.
அந்த அடிப்படையில் கண்டிப் பிரதேசத்துக்கும் ஓரிரு பாடசாலைகள் கிடைக்கலாம். அதுமட்டுமல்லாது இன்னும் மேலதிகமாக கண்டியிலும் நுவரெலியாவிலும் சகல வசதிகளும் கொண்ட தமிழ்மொழிப் பாடசாலையை ஒன்று வீதம் அமைக்க திட்டமிட்டுள்ளோம்.
நீண்ட காலத்திட்டத்தின் அடிப்படையில் இதற்கான அமைவிடம் தெரிவு செய்யப்படும். குறைந்தபட்சம் 2 முதல் 5 ஏக்கர்; வரையான பரப்புள்ள ஒரு இடம் இதற்குத் தேவைப்படுகிறது.
இன்னும் 50 வருடங்கள் சென்றாலும் இடப்பற்றாக்குறை ஏற்படாத சூழலில் அதனை அமைப்பது பொருத்தம் எனக் கருதுகிறோம். அப்படியான ஒரு நிலை உருவானால் தமிழ் முஸ்லிம் மாணவர்;களுக்கு அது வரப்பிரசாதமாக அமையும்.
நகரங்களை நோக்கி படையெடுக்கும் மாணவர் கூட்டத்துக்கு தீர்வை வழங்க வேண்டியுள்ளது. இதுவே பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதன் அடிப்படை நோக்கமாக உள்ளது' என்றார்.

3 hours ago
3 hours ago
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago
5 hours ago