2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

கண்டி பெரஹராவில் அனர்த்தம்: நால்வர் காயம்

Kanagaraj   / 2016 ஓகஸ்ட் 08 , பி.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டி எசல பெரஹராவின், முதலாவது கும்பல் பெரஹராவை கண்டுகளித்துகொண்டிருந்தவர்கள் மீது கட்டடமொன்றின் ஜன்னல் கழன்று விழுந்ததில் காயமடைந்த நால்வர், கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு வீதியில், கட்டடமொன்றுக்கு கீழுள்ள நடைபாதையில், அமர்ந்திருந்து பெரஹராவை கண்டுகளித்துகொண்டிருந்தவர்கள் மீதே, அந்த கட்டடத்தின் யன்னலொன்றே இவ்வாறு விழுந்துள்ளது.

இன்று திங்கட்கிழமை இரவு 9 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், காயமடைந்தவர்களில் பெண்கள் இருவரும், ஆண்கள் இருவரும் அடங்குவர் என்று தெரிவித்த கண்டி பொலிஸார், சம்பவம் தொடர்பில் அந்த கட்டடத்தின் உரிமையாளரை கைது செய்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .