Gavitha / 2016 மார்ச் 21 , மு.ப. 03:38 - 0 - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்
கண்டியில் இருந்து யாழ்ப்பாணம் வரை செல்லும் ஏ - 9 வீதியின் கண்டியிலிருந்து மாத்தளை வரையான பகுதி தாழிறங்கும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாகவும் அதற்கான நிரந்தரத் தீர்வைப் பெற்றுக்கொடுக்கவுள்ளதாக, வீதி அபிவிருத்தி சபையின் கண்டி மாவட்ட பிரதான பொறியியலாளர் டபிள்யூ.எ.எம். விஜேபால தெரிவித்தார்.
கண்டி- மாத்தளை ஏ -9 வீதியில், கட்டுகஸ்தோட்டையில் இருந்து மாத்தளை வரையிலான பகுதி, பாரிய அளவில் வெடிப்புக்குள்ளாகி தாழிறங்கியுள்ளது.
குறித்த வீதி, நாளுக்கு நாள் வௌ;வேறு பகுதிகளில் தாழிறங்கி வருகின்றது. இதன்காரணமாக, பாரமான வாகனங்கள் குறித்த வீதியில் செல்வதற்கு அஞ்சுவதாகவும் இதனால் பாரிய ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாகவும் குறித்த பகுதியிலுள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.
கண்டியில் இருந்து குறைந்தது இருபது இடங்கள் இவ்வாறு தாழிறங்கியுள்ளது. இது தொடர்பாக கண்டி மாவட்ட பிரதான பொறியியலாளர் டபிள்யூ.எ.எம். விஜேபாலவிடம் வினவியபோது, 'கண்டி மாத்தளை வீதி தாழிறங்குவதற்கு பல காரணங்கள் உள்ளன. நீர் குழுhய்கள் வீதியின் கீழே செல்வதனால், அதில் ஏற்படும் நீர் கசிவுகளும் கடும் மழை காலத்தில் ஆற்றின் நீர் மட்டம் உயர்ந்த பின் வீதி தாழிறங்குவதுதையும் அவதானித்து வருகின்றோம்' என்று அவர் குறிப்பிட்டார்.
இதற்கான நிரந்தர தீர்வொன்றை பெற்றுக்கொள்வதற்குத் தேவையான பணத்தைப் பெற்றுத் தருமாறு அரசை கேட்டுள்ளதாகவும் நிதி கிடைக்கப்பெற்றவுடன் குறித்த திட்டம் அமுல்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago