Kogilavani / 2016 ஜூன் 15 , மு.ப. 04:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக்
கண்டி போதனா வைத்தியசாலையில் 78 ஊழியர்கள் டெங்கு நோயால் பீடிக்கப்பட்டுள்ளதுடன் இவர்கள் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சைப் பெற்று வருவதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் சமன் ரத்நாயக்க தெரிவித்தார்.
திங்கட்கிழமை(13) நடைபெற்ற கண்டி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலேயே அவர் இத்தகவலை வெளியிட்டார்.
டெங்கு காய்யச்சல் காரணமாக கண்டி போதனா வைத்தியசாலையில் 460 பேர் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் அவர்களில் 78 பேர் வைத்தியசாலையின் ஊழியர்கள் எனவும் அவர் கூறினார்.
வைத்தியசாலையில் சில மாடிக் கட்டடங்களின் கூரைகளில், நீர் தேங்கி நிற்பதாகவும் இவை டெங்கு நுளம்பு பெருகுவதற்கான காரணியாக அமைவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
கண்டி வைத்தியசாலையை அண்மித்து வசிக்கும் மக்களது சில நடவடிக்கைகளும் டெங்கு நுளம்பு பரவுவதற்கு காரணமாக அமைந்துள்ளதாகவும் நாளாந்தம் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைப் பெற்றும் செல்லும் கண்டி வைத்தியசாலையை பாதுகாப்பதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் எனவும் அவர் கோரினார்.
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago