Editorial / 2020 மே 25 , பி.ப. 04:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
சேஹ்ன் செனவிரத்ன
எலிக் காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில், கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 26 பேரில், 12 பேருக்கு எலிக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக, கண்டி தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சமன் ரத்னாயக்க தெரிவித்தார்.
இதேவேளை, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இரு இளைஞர்கள், எலிக்காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.
கண்டியில், நேற்று (24) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
எலிக்காய்ச்சலால் பீடிக்கப்படுபவர்களில் 90 சதவீதமானோர், உரிய சிகிச்சைகளின் பின்னர் குணமடைந்துள்ள நிலையில், இது குறித்து கவனம் எடுக்காதவர்களே, கடுமையான சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்படுவதாகவும் தெரிவித்தார்.
கடுமையான காயச்சல், அதிக தலைவலி, சிறுநீர் நிறத்தில் மாற்றம், கண் மஞ்சள் நிறத்தில் காணப்படல் என்பன எலிக்காய்ச்சலின் அறிகுறிகள் என்றும் அவர் தெரிவித்தார்.
கொரோனா தொற்றால் தத்தமது வீடுகளில் இருந்து விட்டு, வயல் நிலங்களுக்குச் செல்லும் போது, அவதானத்துடன் செயற்படுமாறும் அவர் தெரிவித்தார்.
27 minute ago
30 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
30 minute ago
1 hours ago
1 hours ago