2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

கண்டியில் 65 குடும்பங்கள் அப்புறப்படுத்தப்பட்டன

R.Maheshwary   / 2022 செப்டெம்பர் 01 , பி.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஷேஹ்ன் செனவிரத்ன

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கண்டி -பூஜாபிட்டிய பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட ஆபத்தான இடங்களிலிருந்து 65 குடும்பங்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் சுதுஹும்பொல, பூவெலிக்கடை ஆகிய பகுதிகளில் ஆபத்தான இடங்கள் என கண்டறியப்பட்டுள்ள இடங்களிலிருந்து பல குடும்பங்களை வெளியேற்றுவது தொடர்பில், மேலதிக கண்காணிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.

பாதுகாப்பற்ற இடங்களில் வசிக்கும் குடும்பங்களை அகற்றுவதற்காக அரசாங்கம் வழங்கும் நட்டஈடானது,  காணி வாங்குவதற்கும் புதிய வீடு கட்டுவதற்கும் போதுமான தொகையாக இல்லை   என மாவட்ட செயலாளர் சந்தன தென்னகோன் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே இக்குடும்பங்களுக்கு தற்காலிக தீர்வை வழங்குவதற்கு பதிலாக, நிர்ணயிக்கப்பட்ட கால எல்லைக்குள் நிரந்தரத் தீர்வுகளை வழங்குவதே முக்கியமானது என அவர் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X