Editorial / 2024 செப்டெம்பர் 25 , பி.ப. 05:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொல்கொல்ல நீர்த்தேக்கத்தின் பராமரிப்பு பணிகள் காரணமாக கண்டியில் சில பகுதிகளில் 65 மணிநேரம் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக மகாவலி அதிகார சபை தெரிவித்துள்ளது.
பொல்கொல்ல நீர்த்தேக்கத்தில் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதாக அச்சபை தெரிவித்துள்ளது. அதன்படி, எதிர்வரும் 27 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் 29 ஆம் திகதி மாலை 6 மணி வரை 65 மணிநேரம் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
கண்டி மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகள், ஹரிஸ்பத்துவ, பூஜாப்பிட்டிய, பாத்ததும்பர, அக்குரணை, குண்டசாலை பிரதேச செயளாலர் பிரிவுக்குட்பட்ட பகுதிகள், ரஜவெல்ல, சிறிமல்வத்தை , அம்பிட்டிய, ஹந்தான மற்றும் மாவத்தகம ஆகிய பிரதேசங்களிலேயே இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
52 minute ago
54 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
54 minute ago
2 hours ago