2026 ஏப்ரல் 16, வியாழக்கிழமை

கண்டியில் கைத்தொழில், சுற்றுலாத்துறை கண்காட்சி

மொஹொமட் ஆஸிக்   / 2020 செப்டெம்பர் 23 , மு.ப. 09:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய மாகாண சிறிய மற்றும் மத்தியத்தர கைத்தொழில், சுற்றுலாத்துறை கண்காட்சி, கண்டி சிட்டி சென்டர் கட்டடத்தில், வௌ்ளிக்கிழமை (25) முதல் ஞாயிற்றுக்கிழமை (27) வரை காலை 9 மணியிலிருந்து மாலை 5 மணிவரை நடைபெறவுள்ளது.

இக்கண்காட்சி வௌ்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று தினங்களும் காலை முதல் மாலை வரை நடைபெறவுள்ளது.

கைத்தறி, கைவினை, நெசவு, சுற்றுலா, கூட்டுறவு, வங்கி, விவசாயம், விளக்கு உற்பத்தி, நடனம் உட்பட இன்னோரன்ன கைத்தொழில் மற்றும் சுற்றுலாத்துறை தொடர்பான நிறுவனங்களின் பங்களிப்புடன் பல விடயங்கள் நடைபெறும்.  

எனவே இத்துறை சார்ந்த ஆர்வமுள்ளவர்கள், கண்காட்சியில் கலந்துகொண்டு பயனடையுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .