Kogilavani / 2016 ஜூலை 07 , மு.ப. 11:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெருந்தோட்டக் கம்பனிகளுக்கு அடிப்பணிந்து செல்லும் அரசாங்கம், கம்பனிகளை செல்லப்பிள்ளைகளை போல் பாதுகாத்து வருவதாக தொழிற் சங்க கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் எஸ்.இராமநாதன் கூறினார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது,
'இந்நாட்டில் தொழில்புரியும் தொழிலாளர்களுக்கு தேசிய ரீதியில் ஆகக் குறைந்த சம்பளத்தை தீர்மானித்து அதனைச் சட்டமாக்க வேண்டும் என தேசிய ரீதியிலான தொழிற்சங்கங்கள் நீண்ட காலமாக போரடி வந்ததன. இதன் பயனாக ஒரு தொழிலாளியினுடைய ஆகக் குறைந்த சம்பளம் பத்தாயிரம் ரூபாயாக இருக்க வேண்டுமென்ற சட்டம், நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால், தோட்டக் கம்பனிகள் முன்வைத்துள்ள ஆலோசனையின்படி, தொழிலாளர்களுக்கு மாதத்தில் 12 நாட்கள் மட்டுமே வேலை வழங்கப்பட்டால் அதன்மூலம் அவர்களது அடிப்படை சம்பளம் 8,640 ரூபாயாகவே இருக்கும். இது சட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ள தொகையிலும் பார்க்க குறைவாகவே உள்ளது.
நாடாளுமன்றத்தில் சட்டமாக்கப்பட்டு தொழிலாளர்களுக்கு வழங்கப்படவிருந்த 2,500 ரூபாய் சம்பள அதிகரிப்பையும் கூட தோட்டக் கம்பனிகள் வழங்க முடியாது அடம்பிடித்து வருகின்றன.
ந்நிலையில், கம்பனிகளுக்கு அரசாங்கம் அடிபனிந்து தற்போது இரண்டு மாதங்களுக்கு மட்டும் தேவையான 9,000 மில்லியன் ரூபாயை கம்பனிகளுக்கு கடனாக கொடுப்பதற்கு முன் வந்துள்ளது. இத்திட்டமானது கம்பனிகாரர்கள் தங்களிடம் பணமில்லை என்று கூறிய கூற்றை அங்கிகரிப்பது போல்; அமைந்துள்ளது' என்றார்.
இதேவேளை, தோட்டக் கம்பனிகளின் புதிய முறைமையை தோட்டத் தொழிற் சங்க கூட்டமைப்பு முழுமையாக நிராகரிப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 hours ago
3 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
7 hours ago