2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

கரப்பந்தாட்ட வீரர்களுக்கு வாய்ப்பு

செ.தி.பெருமாள்   / 2020 ஓகஸ்ட் 23 , பி.ப. 06:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

கரப்பந்தாட்ட பயிற்சிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனத்தின் ஊடாக கரப்பந்தாட்ட பயிற்றுவிப்பாளர்களுக்கான பயிற்றுவிப்பு நுவரெலியா மாவட்டத்தில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ளது.

தேசிய மட்டத்தில் இடம்பெறும் இப்பயிற்றுவிப்புக்கு, நுவரெலியா மாவட்டத்திலுள்ள அனைத்து கரப்பந்தாட்ட பயிற்றுவிப்பாளர்களும் நுவரெலியா மாவட்டத்திலுள்ள பாடசாலை மட்டத்திலுள்ள ஆசிரியர்களும் உள்வாங்கப்படவுள்ளனர்.

இந்நிலையில், இதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. தகுதியுடையவர்கள், திரு.யு.தங்கவேல், நுவரெலியா மாவட்ட கரப்பந்தாட்ட இணைப்பாளர், 164, பிரதான வீதி, மஸ்கெலியா எனும் முகவரிக்கு, விண்ணப்பங்களை சமர்பிக்குமாறு கோரப்பட்டுள்ளனர்.

இல்லையேல், 077-0678536/071-6069093 எனும் அலைபேசியின் ஊடாக விவரங்களைத் தெரிந்துகொள்ளுமாறும் கோரப்பட்டுள்ளது.

இந்நிகழ்வுக்கு குறிப்பிட்ட சிலரே சேர்த்துக்கொளளப்படவிருப்பதால் விரைவில் பதிவுகளை மேற்கொள்ளுமாறும் நுவரெலியா மாவட்ட சம்மேளன இணைப்பாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .