2026 ஏப்ரல் 12, ஞாயிற்றுக்கிழமை

கற்குவாரிக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

Editorial   / 2020 ஓகஸ்ட் 21 , பி.ப. 06:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஏ.எம்.பாயிஸ்

பலாங்கொடை பின்னவல அமுபிட்டிய எனும் இடத்தில் புதிதாக ஆரம்பிக்கப்படவுள்ள கற்குவாரிக்கு எதிர்ப்புத் தெரிவித்து பிரதேச மக்கள், இன்று (21) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கற்குவாரிக்கு சுற்றாடல் அதிகார சபை அதிகாரிகள் களப்பரிசோதனை மேற்கொள்வதற்காக விஜயம் மேற்கொண்டபோது, அங்கு கூடியிருந்த பிரதேச மக்கள் அதற்கான அனுமதியை வழங்க வேண்டாம் என்று தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டக்காரர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அதிகாரிகள், பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்தச் செயற்பாட்டையும் முன்னெடுக்கப்போவதில்லை என்று தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .