Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2025 ஜூலை 16 , பி.ப. 03:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
டீசலுடன் மண்ணெண்ணெய் கலந்து டிப்பர் வாகனத்தை செலுத்திய டிப்பர் ஓட்டுநர் புதன்கிழமை(16) அன்று சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார். நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் சந்தேக நபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என லிந்துலை போக்குவரத்துப் பிரிவு பொலிஸ் பரிசோதகர் பாலித நந்தசிறி தெரிவித்தார்.
வலப்பனையில் இருந்து ஹட்டன் நோக்கி மணல் கொண்டு செல்லும் சில டிப்பர் வாகனங்கள் மண்ணெண்ணெய் கலந்து இயக்கப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட சோதனையின் போது குறித்த டிப்பர் வாகனத்தை நிறுத்தி எண்ணெய் மாதிரிகளை எடுத்து பிசோதித்த நிலையில் இது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
டிப்பர் வாகனத்தில் இருந்து எடுக்கப்பட்ட எரிபொருள் மாதிரிகள் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் ஆய்வகத்திற்கு அனுப்பப்படவுள்ளதுடன், அங்கு பெறப்படும், அறிக்கையுடன் சந்தேக நபருக்கு எதிராக நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என லிந்துலை போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.
ரஞ்சித் ராஜபக்ஷ
14 minute ago
32 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
32 minute ago
1 hours ago
1 hours ago