Editorial / 2020 ஒக்டோபர் 02 , பி.ப. 05:23 - 0 - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்
தலவாக்கலையிலிருந்து ராவணாகொட ஊடாக நாவலப்பிட்டிய, கொத்மலை செல்லும் வீதியில், கலப்பிட்டிய பகுதியில், இன்று (02) மண்சரிவு ஏற்பட்டமையால், அவ்வீதி வழியான போக்குவரத்து முற்றாகத் தடைப்பட்டுள்ளது.
இந்நிலையில், இப்பகுதியில் மண்சரிவு அபாயம் இருப்பதால், தொடர்ந்து 5 நாள்களுக்கு, இவ்வீதி மூடப்பட்டிருக்கும் என, வீதி அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தொடர்ச்சியாக இப்பகுதியில் மண்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதன் காரணமாக இவ்வீதியைப் பயன்படுத்தும் பயணிகள், மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு கோரப்பட்டுள்ளனர்.
கொத்மலை பிரதேச செயலகத்துக்குட்பட்ட இராவணகொட வீதி மூடப்பட்டு இருப்பதால், பொதுமக்களும் வாகன சாரதிகளும் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்.
பத்தனை, போகாவத்தை ஆகிய பகுதிகளிலிருந்து இராவணகொட கலப்பிட்டிய வழியாக நாவலப்பிட்டி, மல்தெனிய, மகாவெலிகம, பெல்டன், ரொஜஸ்டன்கம, ஹரங்கல ஆகிய பிரதேசங்களுக்குச் செல்லும் பிரதான வீதியில், கலப்பிட்டிய எனும் இடத்தில், மண்சரிவு ஏற்பட்டுள்ளமையால், குறித்த வீதி சேதமடைந்துள்ளது. எனவே, வாகன சாரதிகளும் பொதுமக்களும் சிரமங்களுக்கு மத்தியில் பயணித்து வருகின்றனர்.
மேலும், மழைகாலங்களில் இவ்வீதியினூடாக வாகனங்களைச் செலுத்த முடியாது என, வாகன சாரதிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.
19 minute ago
1 hours ago
6 hours ago
17 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
1 hours ago
6 hours ago
17 Apr 2026