2026 ஏப்ரல் 16, வியாழக்கிழமை

‘கல்விக்குக் கரம் கொடுப்போம்’

ஆ.ரமேஸ்   / 2020 மே 26 , மு.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுவரெலியா பிரதேச சபையின் ஊடாக "கல்விக்கு கரம் கொடுப்போம்" வேலைத்திட்டத்துக்கு சபை அனுமதி தொடர்பில் முன்வைக்கப்பட்ட பிரேரணை நிறைவேற்றப்பட்டது.

நுவரெலியா பிரதேச சபையின் உறுப்பினர்கள் அடங்கிய  மாதாந்த விசேட அமர்வு சபை, தவிசாளர் வேலு யோகராஜ் தலைமையில், நானுஓயாவில் அமைந்துள்ள பிரதான காரியாலய கூட்ட மண்டபத்தில், இன்று (26) நடைபெற்றது.

இதன்போது, நாட்டில் தற்போது உள்ள கொவிட்-19 காரணமாக ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில், பாடசாலை கல்வி நடவடிக்கைகளைத் தொடர முடியாத நிலையிலுள்ள நுவரெலியா பிரதேச சபைக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு உதவும் வகையில் "கல்விக்கு கரம் கொடுப்போம்" எனும் தொனியில் வேலைத்திட்டம் ஒன்றுக்கு அனுமதி கோரி தவிசாளரால் பிரேரணை முன்வைக்கப்பட்டது.

இந்தப் பிரேரரணை அனைத்து உறுப்பினர்களாலும் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அந்தவகையில், நுவரெலியா பிரதேச சபைக்குரிய, தரம் ஆறு முதல் க.பொ.த.சாதாரண தரம் வரையான பாடசாலை மாணவர்களுக்கு, வீட்டிலிருந்து கல்வியைத் தொடரும் வகையில் அவர்களுக்காக மாவட்ட  கல்வி பணிப்பாளர் டப்ளியூ . பியதாசவின் அனுமதியுடன் தயாரிக்கப்படும் வினாத் தாள்களை பிரதேச சபை வழங்கவுள்ளது.

இவ்வினாத் தாள்கள் தமிழ், சிங்கள மாணவர்களுக்கு, அவர்கள் கற்கும் பாடசாலைகளின் அதிபர்களுக்கு வழங்கப்பட்டு, மாணவர்களின் வீடுகளுக்கு விநியோகிக்கப்படவுள்ளத என, தவிசாளர் தெரிவித்தார்.

அத்துடன் எதிர்வரும் காலங்களில் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்ற உள்ள மாணவர்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டு, அவர்களின் கல்வி மட்டத்தை உயர்த்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் தவிசாளர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .