Editorial / 2018 ஜனவரி 31 , மு.ப. 11:51 - 0 - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன், எஸ்.சதீஸ்
ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிக்கோயா காசல்ரீ நீர்த்தேக்கத்தின் அணைக்கட்டுக்கு அருகாமையில் பெண்ணொருவரின் சடலம், அன்று (31) காலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடுத்து, கடற்படையினரின் உதவியுடன் மீட்கப்பட்ட இச்சடலம், மரண விசாரணைகளின் பின் வைத்திய பரிசோதனைக்காக, நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
காசல்ரீ பிரிதேசத்தில், ஒரு பிள்ளையின் தாயாரான 28 வயதுடைய பேபி மரினா எனும் பெண், கடந்த ஒரு வாரத்துக்கு முன்னர் காணாமல் போயிருந்தார் என, பொலிஸில் முறையிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், மேற்படி சடலம், காணாமல் போனதாகக் கருதப்படும் பெண்ணுடையதாக இருக்கலாமெனப் பொலிஸார் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
இப்பெண் தற்கொலை செய்து கொண்டரா அல்லது கொலை செய்யப்பட்டு நீர் தேக்கத்தில் எறியப்பட்டுள்ளாரா என்பது தொடர்பாக, பொலிஸார் புலன் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரைணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
22 minute ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
8 hours ago