Editorial / 2024 ஏப்ரல் 15 , பி.ப. 02:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹோலி ரூட் தோட்ட சிறுவர் பராமரிப்பு நிலையத்துக்கு அருகாமையில் இருந்து ஆணின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.
கடந்த மூன்று தினங்களாக காணாமல் போயிருந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான ஆறுமுகம் காளிமுத்து (61) என்பவரே உயிரிழந்துள்ளதாக சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
திங்கட்கிழமை (15) காலை ஸ்தலத்துக்கு விரைந்த தலவாக்கலை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதோடு, சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
அத்தோடு குறித்த நபர் காணாமல்போன விடயம் தொடர்பில் எவ்விதமான முறைப்பாடுகளும் பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யப்படவில்லை என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
மலையக நிருபர்கள்
6 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
9 hours ago