Janu / 2024 ஒக்டோபர் 02 , பி.ப. 04:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
நண்பனின் காதலியை சந்திப்பதற்காக சென்ற பாடசாலை மாணவன் , கும்பலொன்றினால் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக மாத்தளை மஹாவெல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மடவளை, உல்பத்த , நாளந்த தோட்டத்தை சேர்ந்த கவுடுபெலெல்ல கலைமகள் வித்தியாலயத்தில் கல்வி கற்கும் 17 வயதுடைய மோகன் யுகேஷ் என்ற பாடசாலை மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார் .
குறித்த மாணவன் தனது நண்பர்கள் இருவருடன் , நண்பனின் காதலியான பாடசாலை மாணவியை சந்திப்பதற்காக செவ்வாய்க்கிழமை (01) மாலை 5.30 மணியளவில், மடவல உல்பத்த ஆத்திஸ்மலை பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுக்கொண்டிருந்த போது கொடவெல புத்தர் சிலை அருகில் வைத்து இனந்தெரியாத கும்பலால் மாணவர்கள் தாக்கப்பட்டுள்ளனர் .
இதன்போது ஏனைய இருவர் தப்பியோடியுள்ளதுடன் குறித்த மாணவன் தாக்குதலுக்குள்ளாகி தரையில் விழுந்து கிடந்த நிலையில் அப் பகுதி மக்களால் மாத்தளை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் அவர் உயிரிழந்துவிட்டதாக தெரியவந்துள்ளது .
பாடசாலை மாணவியின் காதலனும் மற்றைய மாணவனும் தாக்குதலில் இருந்து தப்பி ஓடி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இச் சம்பவம் தொடர்பில் , மாணவியின் தந்தை கைது செய்யப்பட்டு விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
11 Apr 2026
11 Apr 2026
11 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 Apr 2026
11 Apr 2026
11 Apr 2026