Janu / 2026 பெப்ரவரி 24 , பி.ப. 12:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவிசாவளை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த கார் ஒன்று, திங்கட்கிழமை (23) மாலை நோர்ட்டன் லக்ஷபான பகுதியில் வைத்து வீதியை விட்டு விலகிப் புரண்டு விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவிசாவளைப் பகுதியிலிருந்து சிவனொளிபாதமலை தரிசனத்திற்காக காரில் சென்ற நால்வர், தமது வழிபாடுகளை முடித்துவிட்டுத் திரும்பும்போது நோர்ட்டன், லக்ஷபான பகுதியில் வைத்து குறித்த கார் வீதியை விட்டு விலகி சுமார் 150 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் காரில் பயணித்த மூவர் காயமடைந்துள்ளதுடன், அவர்கள் லக்ஷபான பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் இருவரது நிலைமை கவலைக்கிடமாக இருந்தமையால், மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நோர்ட்டன் பிரிட்ஜ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

21 minute ago
45 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
45 minute ago
47 minute ago