2026 ஏப்ரல் 18, சனிக்கிழமை

குடிநீர் கோரி ஆர்ப்பாட்டம்

மொஹொமட் ஆஸிக்   / 2017 நவம்பர் 03 , பி.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

கண்டி அலவத்துகொடை சைஸ்டன் பிலேஸ் மக்கள், தமக்கு குடிநீரை பெற்றுத் தருமாரு கோரி, கண்டியில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

1935ஆம் ஆண்டிலிருந்து தாம் அங்கு வசித்து வருவதாகவும் தற்போது இங்கு 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்த பிரதேச மக்கள், தமக்கு இதுவரை குடிநீரைப் பெற்றுத்தர எவரும் முன்வரவில்லை என்றும் குற்றஞ்சாட்டினர்.

எதிர்வரும் தேர்தலுக்கு முன்னராவது, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீரை பெற்றுத்தருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .