2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

‘குத்திய முள் தானாக விலகியது’

ஆ.ரமேஸ்   / 2020 மே 24 , பி.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

தொழிலாளர் தேசிய சங்கத்தின் காலில் குத்தியிருந்த முள்ளை எடுத்தெரிவதற்கு முன்பே, தானாக வெளியேறிவிட்டது என்று தெரிவித்துள்ள சங்கத்தின் நிர்வாகப் பொறுப்பதிகாரியும் ஹட்டன் நகரசபை உறுப்பினரும் முன்னாள் தலைவருமான அழகமுத்து நந்தகுமார், இதனால், தொழிலாளர் தேசிய சங்கத்துக்கு எந்தவொரு பாதிப்பும் இல்லை என்றும் தெரிவித்தார்.

கொட்டக்கலை பிரதேச சபையின் தொழிலாளர் தேசிய சங்கத்தின் உறுப்பினர்கள், இலங்கை தொழிலாளர் காங்கிரஸுடன் இணைந்தமை தொடர்பாக, இன்று (24) விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

செவனையா லெட்சுமணன், தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஒரு செல்லாக் காசு என்று தெரிவித்துள்ள அவர், காலத்துக்குக் காலம் கட்சி மாறும் இதுபோன்ற நபர்கள், சங்கத்திலிருந்து விலகிச் செல்வதால், சங்கத்துக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இதேவேலை, வலப்பனை தேர்தல் தொகுதிக்கு பொறுப்பான தேசிய தொழிலாளர் சங்கத்தின் அமைப்பாள் சண்முகா, வேறு கட்சியொன்றுடன் இணையவுள்ளார் என்று வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என்றும் அவர் கட்சியை விட்டுச் செல்லமாட்டார் என்றும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .