2025 மே 19, திங்கட்கிழமை

குயில்வத்தை வீதி தாழிறங்கியது

R.Maheshwary   / 2022 செப்டெம்பர் 13 , மு.ப. 09:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுதத் எச்.எம்.ஹேவா

கடந்த சில நாட்களாக மத்திய மலைநாட்டில் பெய்து வரும் கடும் மழை காரணமாக ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் குயில் வத்தை பகுதியிலுள்ள வீதியின் ஒருபகுதி தாழிறங்கியுள்ளது.

வீதியின் ஒருபகுதி தாழிங்கியுள்ள காரணத்தினால், மற்றைய பகுதியை போக்குவரத்துக்காக மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

குறித்த வீதி மேலும் தாழிறங்கும் அபாயம் காணப்படுவதால் அந்தப் பகுதியூடாக  வாகனங்களை செலுத்தும் அனைத்து சாரதிகளையும் அவதானமாக இருக்குமாறு அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.
 
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X