Editorial / 2020 செப்டெம்பர் 23 , பி.ப. 02:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
மஹேஸ் கீர்த்திரத்ன
மாத்தளை நகரை அண்மித்தப் பகுதிகளில், குரங்குகளின் தொல்லை அதிகாரித்துள்ளால், விவசாயச் செய்கைகளுக்குப் பாரிய பாதிப்பு ஏற்படுவதுடன், இதனால் வருடமொன்றுக்கு 100 மில்லியன் ரூபாய் நட்டம் ஏற்படுவதாக, மாத்தளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹன திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மாத்தளை நகரை அண்மித்த பல கிராமங்களில் உள்ள மக்கள், குரங்குகளால் பாரிய பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.
மாத்தளையிலுள்ள தனது கட்சி அலுவலகத்தில், நேற்று முன்தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்துரைத்துள்ள அவர், கிராமங்களுக்குள் வரும் குரங்குகள், விவசாயச் செய்கைகளை நாசம் செய்வதாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் தனது கவனத்துக்குக் கொண்டுவந்துள்ளனர் என்றுத் தெரிவித்தார்.
குரங்குகளால் ஏற்படும் அச்சுறுத்தல்களைக் குறைப்பதற்காக, கடந்த ஆட்சியில், வாயு ரைபிள்களை விவசாய அமைப்புகளுக்குப் பெற்றுக்கொடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
குரங்குகளால் விவசாயச் செய்கைகளுக்கு, வருடாந்தம் 100 மில்லியன் ரூபாய்க்கு நட்டம் ஏற்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago