2025 மே 13, செவ்வாய்க்கிழமை

குருக்களின் உதவியாளர் மரணம்: குருக்கள் கைது

Editorial   / 2023 ஒக்டோபர் 04 , பி.ப. 01:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.கிருஸ்ணா 

நோட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிளவட்டன் தோட்ட பிள்ளையார் ஆலயத்தின அறையொன்றில் தன்னுயிரை மாய்த்துக்கொண்ட  சிறுவனின் சடலம், ஹட்டன் நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் ராமமூர்த்தி பார்வையிட்டார்.

அதன் பின்னர் கிளங்கன் மாவட்ட வைத்தியசாலைக்கு சடலம், செவ்வாய்க்கிழமை (03) மாலை   கொண்டுச்செல்லப்பட்டுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் பேரில் ஆலய குருக்கள் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒஸ்பன் தோட்ட கீழ்ப்பிரிவில் வசித்து வந்த எஸ். ஜனநாதன்  (வயது 16) சிறுவனே தோட்டத்தின் விநாயகர் ஆலய அறையில் செவ்வாய்க்கிழமை (03)  காலை தன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். இவர் பிரதான குருக்களுக்கு உதவியாளராக பணியாற்றிவந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில்,   மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது,

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X