Editorial / 2020 ஓகஸ்ட் 19 , பி.ப. 12:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன், எம்.கிருஸ்ணா, எஸ்.சதிஸ், மொஹொமட் ஆஸிக்
நாவலப்பிட்டி நகர பகுதியில் விற்பனைக்காக வைத்திருந்த ஒரு தொகை கேரளா கஞ்சாவுடன் நால்வரை, நாவலப்பிட்டி குற்றத்தடுப்பு பொலிஸார், நேற்று மாலை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போதே, பொலிஸார் மேற்படி நால்வரையும் கைதுசெய்துள்ளனர்.
அவர்களிடமிருந்து 34,500 ரூபாய் பணமும் மீட்கப்பட்டுள்ளது.
நாவலப்பிட்டியைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், இவர்கள் நீண்ட காலமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளனர் என்று பொலிஸார் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேற்படி நால்வரையும் நாவலப்பிட்டி நீதவான் முன்னிலையில் ஆஜப்படுத்தப்படவுள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
40 minute ago
14 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
14 Apr 2026