Editorial / 2020 மே 26 , பி.ப. 07:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
காஞ்சன குமார ஆரியதாச
மத்திய மாகாண சபையூடாக தங்களுக்குப் வழங்கப்பட்ட கொடுப்பனவுகள் உள்ளிட்ட போக்குவரத்துச் சலுகைகள் நிறுத்தப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தம்புளையிலுள்ள வீர டென்சில் கொப்பேகடுவ வைத்தியசாலைக்கு முன்னால், தாதிமார்கள் பலர் அமைதிப் போராட்டமொன்றை, இன்று (26) முன்னெடுத்தனர்.
இதன்போது, பல பதாகைகளை ஏந்திய வண்ணம், தம்புள்ள ஆதார வைத்தியசாலையின் பணியாளர்கள் சுமார் 20 பேர் இந்த அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்ததோடு, தங்களுக்கான ஒழுங்கான போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை என்று தெரவிக்கப்பட்டது.
எனவே, தங்களுக்கான முறையான போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படல் வேண்டும் என, அரசாங்கத்தின் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
15 Apr 2026
15 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Apr 2026
15 Apr 2026