2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

கொட்டகலை நகரத்தில் தீபாவளி ​சோதனை

R.Maheshwary   / 2022 ஒக்டோபர் 19 , பி.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்‌ஷ

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொது ​சுகாதார பரிசோதகர்களால் கொட்டகலை நகரிலுள்ள வர்த்தக நிலையங்கள், உணவகங்கள் என்பன திடீர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

இதன்போது 8 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கலும் செய்யப்பட்டுள்ளது.

நுகர்வோருக்கு தரமான பொருள்களைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில், கொட்டகலை பொதுசுகாதார பரிசோதகர்களால் நேற்று(19) இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது பாவனைக்கு உதவாத பல பொருள்கள் கைப்பற்றப்பட்டதுடன், அவற்றை அழிக்கும் நடவடிக்கை சுகாதார ​பரிசோதகர்களால் முன்னெடுக்கப்பட்டது.

  சில உணவகங்கள் அசுத்தமாக இருந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டதுடன், அவற்றை சுத்தம் செய்வதற்கு 14 நாட்கள் காலக்கெடு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X